ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம்

வேறு பெயர்கள்: அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம் · திருநிலை பெரியாண்டவர் கோயில்

திருநிலை கிராமம் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 8 கிமி தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து கிழக்கே 14 கிமி தொலைவிலும், திருப்போரூரிலிருந்து மேற்கே 12 கிமி தொலைவிலும் உள்ளது.

செங்கல்பட்டு, தமிழ்நாடு

கோயில் ஒரு பார்வையில்

மூலவர்
ஸ்ரீ பெரியாண்டவர் (சுயம்பு லிங்கம்) (சிவன்), சுயம்பு
அம்மன் / தாயார்
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி (திருநிலைநாயகி) (பார்வதி)
பிற சன்னதிகள்
விபூதி விநாயகர் (விநாயகர்), முருகர் (முருகன்)
தீர்த்தம்
சித்தாமிர்த குளம்
திசை
கிழக்கு
ராஜகோபுரம்
1 நிலை
நிர்வாகம்
டிரஸ்ட்
மாவட்டம்
செங்கல்பட்டு
மாநிலம்
தமிழ்நாடு

இங்கு பக்தர்கள் வேண்டுவது

கண்ணோட்டம்

சிவன், சக்தி ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே அமையப் பெற்ற திருத்தலம். பெரியாண்டவர் ஆலய புராண வரலாற்றின்படி சக்தியின் சாபத்தால் சித்தம் கலங்கி பித்தம் பிடித்த நிலையில் ஈசன் உலகை வலம் வந்து திருநிலையில் ஓருநிலையாய் நின்ற இடம். தாயின் கருவின்றி பெரிய மனிதராக பிறவியெடுத்து ஈசனே உலகை வலம் வந்தபோது பார்வதியால் பெரியாண்டவர் என்று வணங்கப்பட்ட திருத்தலம். சிவபெருமானின் பாதம் பட்ட தலம். குழந்தைப் பேறு அருளும் பரிகாரத் தலம். கலியுகத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஈசன் ஜோதி ரூபமாக காட்சி அளித்து நின்ற தலம். ஜோதியாக காட்சி தந்த வெட்ட வெளி இடத்தில் சுயம்புலிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபடும் தலம். லிங்கத்தின் வலதுபுறம் சிவசக்தி இருவரும் ஒருங்கே அமர்ந்து தெய்வீகக் காட்சி தருகின்ற தலம். பார்வதி தேவி திருநிலைநாயகி என அழைக்கப்படும் தலம். சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம். சுயம்பு லிங்கத்தைச் சுற்றி சிவகணங்கள் மண் உருக்கொண்டு இறைவனை பூஜிக்கும் தலம். குளம் மற்றும் ஏரி ஆகிய இரு கரைகளுக்கு மத்தியில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஆலயம்.

சிறப்புகள்

சுயம்பு லிங்கத்தைச் சுற்றி செவ்வக வடிவில் 21 சிவகணங்கள் வணங்கி நிற்கும் அமைப்பு இத்தலத்தின் தனிச்சிறப்பு.

பக்தர்கள் 21 மண் உருண்டைகள் பிடித்து, ஒவ்வொன்றுக்கும் அபிஷேகம், கற்பூர ஆராதனை செய்யும் சிவகண பூசை இங்கு நடைபெறுகிறது.

விபூதி விநாயகருக்கு பக்தர்களே விபூதி அபிஷேகம் செய்யலாம்.

குழந்தைப் பேறு அருளும் பரிகாரத் தலம்; வேண்டுதல் நிறைவேறிய குடும்பங்கள் துலாபாரம் செலுத்துகின்றனர்.

ஒவ்வொரு பௌர்ணமி மாலையும் ஜோதி ஏற்றப்படுகிறது.

வரலாறு

பல்லவர்களால் புகழ்பெற்ற பல ஆலயங்கள் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைவகுரவர்களால் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவதலமான திருக்கழுக்குன்றம். இதன் வடகிழக்கே 8 கிமீ தூரத்திலும், முருகன் அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த தலமான திருபோருரில் இருந்து மேற்கு திசையில் 12 கிமீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 14 கிமீ தூரத்திலும், இயற்கை எழில் நிறைந்த, பசும்சோலைகள் சூழ்ந்த, திருநிலை கிராமத்தில் புள்ளினங்கள் இசைபாடும் குளம் மற்றும் ஏரி இருக்கரையின் மத்தியில் சுயம்பு லிங்கமாக தோன்றி சிவபெருமான் பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்பாளிக்கின்றார்.

மனிதனாக வந்து மக்களை காக்கும் மகேசன் — சிவபெருமானே மனிதவடிவம் தாங்கி உலகலாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன்பாதத்தை பதித்து நின்று பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார். இவ்வாலயத்தில் எம்பெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.

முன் ஒரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான். அவற்றுள் முக்கியமானது அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும் என்பது. இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டு காக்குமாறு வேண்டினர்.

சக்தியின் சாபத்தால் ஈசன் மனித அவதாரம் கொண்டு உலகமெல்லாம் திக்கு திசையின்றி அலைந்து திரிந்தார். பார்வதிதேவி தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள். அது பிரகாசமாய் பூமியில் ஓர் இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சிவகணங்களாக மாறி ஜயனின் வருகைக்காக காத்து நின்றன.

சூலாயுத ஒளியைக் கண்டு எம்பெருமான் திருநிலையாய் ஓர் இடத்தில் பாதம் பதித்து ஒருநிலையாய் நின்றார். உமையவள் அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். "பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர்" என உமையவள் கூறினாள். தேவர் முதலானோர் "பெரியாண்டவா! பெரியாண்டவா!" எனக் கூறி அழைத்து வாழ்த்தினர்.

மேலும் பார்வதிதேவி, "தாயின் கருவின்றி பெரிய மனிதனாக தோன்றி உலகை வலம் வந்தமையால், இவ்வுலகில் கருவின்றி வாடும் தம்பதியர்க்கு யார் இவ்விடத்தில் உன் நாமம் நினைக்கின்றார்களோ அவர்களுக்கு மழலைகளை வழங்கி அருள் புரியவேண்டும்" என வேண்டினார். இறைவனும் அவ்வாறே நடைபெறும் என அருளினார்.

ஒருநிலையில் திருநிலையாய் நிறுத்திய இவ்விடம் "திருநிலை" என அழைக்கப்படும் என்று கூறிய ஜயன், "உலகை காக்கும் நாயகி உமையவள் என்னை திருநிலையாய் நிலை கொண்டு ஆட்கொண்டதால் இன்று முதல் திருநிலைநாயகி என அழைக்கப்படுவாள்" என்று வாழ்த்தினார்.

நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி திருநிலைக்கு செல்லும்படி வழிகாட்டினார். ஒரு பன்றி அவர்களுக்கு வழிகாட்ட அவர்கள் அதன் பின்னே சென்று வழிபட்டனர். ஒர் ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகின்றது.

திருநிலையில் ஒருநிலையாய் நின்று அற்புதங்கள் நிகழ்த்தி அன்பர்களை காத்திடும் இறைவனாக, நெஞ்சாரத் தம்மை பணிந்து வணங்குவோர்க்கு வேண்டும் வரம் வழங்கி, இந்த புவணத்தை காத்து ரட்சிக்கும் எம்பெருமானாக பெரியாண்டவர் விளங்குகிறார்.

தல புராணம்

இப்பகுதி மரபாகச் சொல்லப்படுவதைப் பதிவு செய்கிறது. இது தனியாக உறுதிசெய்யப்பட்ட வரலாறாக முன்வைக்கப்படவில்லை.

சுந்திரபத்திரன் என்ற அசுரன், சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே தனக்கு மரணம் என்ற வரம் பெற்று தேவர்களைத் துன்புறுத்தினான். சக்தியின் சாபத்தால் ஈசன் மனித வடிவில் உலகெங்கும் அலைந்தார்.

பார்வதி தேவி வீசிய சூலாயுதம் இவ்விடத்தில் நிலைத்து நின்றது; அங்கு சிதறிய 21 மண் உருண்டைகள் சிவகணங்களாயின. அந்த ஒளியைக் கண்டு ஈசன் இங்கு ஒருநிலையாய் நின்றார். உமையவள் அவரை "பெரியாண்டவர்" என அழைத்து, இங்கு வேண்டும் மகப்பேறு இல்லாத தம்பதியருக்கு குழந்தை வரம் அருள வேண்டினாள். ஈசன் இத்தலத்தை "திருநிலை" எனவும், அன்னையை "திருநிலைநாயகி" எனவும் பெயரிட்டார்.

கனவில் வழிகாட்டப்பட்டு ஒரு பன்றியைப் பின்தொடர்ந்து இங்கு வந்து வழிபட்ட குழந்தையில்லாத தம்பதிக்கு ஓராண்டில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் தல வரலாறு கூறுகிறது.

தெய்வங்களும் சிறப்பும்

மூலவர் ஸ்ரீ பெரியாண்டவர் (சிவன்) சுயம்பு லிங்க வடிவில்; லிங்கத்தின் மேல் மனித உருவில் அமர்ந்த கோலம். லிங்கத்தின் வலதுபுறம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி. அம்பாள் திருநிலைநாயகி என அழைக்கப்படுகிறார்.

தல விநாயகர், முருகர், விபூதி விநாயகர், 21 சிவகணங்கள், நாகாத்தம்மன் ஆகியோரும் இங்கு உள்ளனர்.

கட்டடக்கலை

ஆலயம் கிழக்கு நோக்கியது; வடபுறம் குளமும் தென்புறம் ஏரியும் உள்ளன.

ராஜகோபுரம் மூன்று நிலை கோபுரம்.
நுழைவாயில் இடதுபுறம் தல விநாயகர், வலதுபுறம் மயில் மீது ஆறுமுக முருகர்.
16 கால் மண்டபம் நுழைந்தவுடன் நேரே விபூதி விநாயகர்.
கருவறை வெட்டவெளியில் சுயம்பு லிங்கம்; வலதுபுறம் அங்காள பரமேஸ்வரி; சுற்றிலும் 21 சிவகணங்கள்.
நாகாத்தம்மன் சன்னதி சித்தாமிர்த குளத்திற்குச் செல்லும் வழியில், விநாயகர், முருகர் இருபுறமும் இருக்க கிழக்கு நோக்கி அமர்ந்த கோலம்.

பக்தர்களுக்கான வழிகாட்டல்

ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் (மதிய இடைவேளை இல்லை).

சிவகண பூசை பெரியாண்டவரை வணங்கி, சித்தாமிர்த குளத்தில் நீராடி, பெரியாண்டவர் மற்றும் அங்காள பரமேஸ்வரிக்கு இரண்டு கலசங்கள் அமைக்க வேண்டும். 21 சிவகணங்கள் அருகே அகல் விளக்கேற்றி, எண்ணெய், சீயக்காய், பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், சந்தனம் முதலியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
கொண்டு வர வேண்டியவை சிவகண பூசை மற்றும் சுயம்பு லிங்க அபிஷேகத்திற்கான பூசை பொருட்கள் பட்டியலை ஆலயம் வழங்குகிறது. கொண்டைக்கடலை, அன்னதான பிரசாதம், வடை, பாயாசம் ஆகியவற்றை வீட்டிலிருந்து தயாரித்து கொண்டு வரவும்.
பேருந்து வசதி திருக்கழுக்குன்றத்திலிருந்து T11, T75 மற்றும் சரஸ்வதி மினி பஸ்.

சன்னிதிகள்

  • தல விநாயகர்

    விநாயகர்

    நுழைவாயிலின் இடதுபுறம்.

  • முருகர்

    முருகன்

    நுழைவாயிலின் வலதுபுறம்; ஆறுமுகம், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலம்.

  • விபூதி விநாயகர்

    விநாயகர்

    16 கால் மண்டபத்தில் நேர் எதிரே. பக்தர்களே விபூதி அபிஷேகம் செய்யலாம்.

  • ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி

    பார்வதி

    சுயம்பு லிங்கத்தின் வலதுபுறம்.

  • 21 சிவகணங்கள்

    சுயம்பு லிங்கத்தைச் சுற்றி செவ்வக வடிவில் வணங்கி நிற்கும் 21 சிவகணங்கள்.

  • நாகாத்தம்மன்

    கிழக்கு நோக்கியது

    வடபுறம் சித்தாமிர்த குளம் செல்லும் வழியில், விநாயகர், முருகர் இருபுறமும்.

வழிபாடுகள்

  • பௌர்ணமி சிறப்பு அபிஷேகம், அன்னதானம்

    மாதந்தோறும் · 5:00 PM

    ஒவ்வொரு பௌர்ணமியும் மாலை 5 மணி முதல் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை; பின்னர் அன்னதானம். ஜோதி ஏற்றப்படுகிறது.

  • ஞாயிறு மாலை சிறப்பு அபிஷேகம்

    வாரந்தோறும்

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள்.

பக்தர்கள் செய்யக்கூடிய பூஜைகள்

  • சிவகண பூசை

    கோரிக்கையின் பேரில்

    21 மண் உருண்டைகளைச் செவ்வக வடிவில் அடுக்கி, ஒவ்வொன்றுக்கும் அபிஷேகம், கற்பூர ஆராதனை செய்யும் பூசை; பெரியாண்டவர், அங்காள பரமேஸ்வரிக்கு கலசம் அமைத்து செய்யப்படுகிறது.

  • விபூதி விநாயகருக்கு விபூதி அபிஷேகம்

    கோரிக்கையின் பேரில்

    பக்தர்களே விபூதியால் அபிஷேகம் செய்து செல்வம், கல்வி, அறிவு வேண்டுகின்றனர்.

  • துலாபாரம்

    கோரிக்கையின் பேரில்

    குழந்தை வரம் பெற்ற குடும்பங்கள் துலாபாரம் செலுத்துகின்றனர்.

திருவிழாக்கள்

  • ஆங்கில புத்தாண்டு

    அடுத்து: வெள்., 1 ஜன., 2027

    ஜனவரி 1 சிறப்பு நிகழ்ச்சிகள்.

  • மகா சிவராத்திரி

    வழக்கமாக பிப்ரவரி – மார்ச்

    மாலை 4 மணிக்கு தேவார இசையுடன் தொடங்கி, சுமார் 6 மணிக்கு பெரியாண்டவர், அங்காள பரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா.

  • தமிழ் புத்தாண்டு (சித்திரை 1)

    வழக்கமாக ஏப்ரல்

    சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்.

  • பால் அபிஷேக விழா

    அடுத்து: ஞாயி., 12 செப்., 2027

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12 அன்று பெரியாண்டவர், அங்காள பரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் பால் அபிஷேகம்.

  • அன்னாபிஷேகம்

    வழக்கமாக அக்டோபர் – நவம்பர்

    ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம்.

  • கார்த்திகை தீபம்

    வழக்கமாக நவம்பர் – டிசம்பர்

    கார்த்திகை மாத தீபம் சிறப்பு நிகழ்ச்சி.

திருவிழாத் தேதிகள் தமிழ் நாட்காட்டியைப் பின்பற்றுவதால் ஒவ்வொரு ஆண்டும் மாறும்.

ஆதாரங்கள்

  1. Arulmigu Sri Periyandavar Temple, Thirunilai – official website, Periyandavar.com
ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம், திருநிலை – நேரம், வரலாறு, பூஜை | Aadhibhagavan